A. R. Rahman "ORU POIYAAVADHU SOL KANNEY" lyrics

ORU POIYAAVADHU SOL KANNEY

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2)பூக்களில் உன்னால் ரத்தம் அடி மௌளனத்தில் உன்னால் யுத்தம்இதைத் தாங்குமா என் நெஞ்சம்...இதைத் தாங்குமா என் நெஞ்சம்உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான் ரொம்பப் பக்கம் பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்

இரவினைத் திரட்டி ஆஆ...இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தானோ கண்மணியின் குழல் செய்தானோநிலவின் ஒளியெடுத்துத் கண்கள் செய்தானோவிண்மீன் விண்மீன் கொண்டு விரலில் நகம் சமைத்துமின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோவாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள்கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோகாதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2)பூக்களில் உன்னால் சத்தம் அட மௌளனத்தில் உன்னால் யுத்தம்இதைத் தாங்குமா என் நெஞ்சம்...தாங்குமா என் நெஞ்சம்உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான் ரொம்பப் பக்கம் பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது நீதானேமலரின் முகவரிகள் சொன்னது நீதானேஆஆ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானேகங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும்காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானேஆனால் உயிரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோகானல் நீரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2)பூக்களில் உன்னால் சத்தம் அட மௌளனத்தில் உன்னால் யுத்தம்இதைத் தாங்குமா என் நெஞ்சம்...தாங்குமா என் நெஞ்சம்உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான் ரொம்பப் பக்கம் பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான்பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்

Here one can find the lyrics of the song ORU POIYAAVADHU SOL KANNEY by A. R. Rahman. Or ORU POIYAAVADHU SOL KANNEY poem lyrics. A. R. Rahman ORU POIYAAVADHU SOL KANNEY text.